• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • வலங்கைமானில் சாலை இருபுறமும் சீமைகருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதி.

வலங்கைமானில் சாலை இருபுறமும் சீமைகருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதி.

தருண் சுரேஷ்

UPDATED: Jun 18, 2024, 7:53:32 PM

ருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட வளையம்மாபுரம் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் பேரூராட்சி மூலம் சுமார் ரூ. 65 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2021- 22 ஆம் நிதியாண்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. 

இந்த சாலையானது வளையமாபுரம் பகுதியையும், வலங்கைமான் கால்நடை மருத்துவமனை சாலையையும் இணைப்பு சாலையாக அமைந்துள்ளது.

இந்த சாலை இரு மங்கிலும் தற்போது கருவை மரங்கள் ஆக்கிரமித்து நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே பல லட்சம் ரூபாய் செலவு செய்து போடப்பட்ட சாலை மக்கள் பயன்படுத்தும் வகையில், சாலையை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended