- முகப்பு
- மாவட்டச் செய்தி
- காஞ்சிபுரத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள்கள் விற்பனை நடைபெற்றால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்
காஞ்சிபுரத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள்கள் விற்பனை நடைபெற்றால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்
ராஜ் குமார்
UPDATED: Jun 23, 2024, 6:56:54 PM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் உற்பத்தி / விற்பனை / கடத்தல் செயல்கள், கஞ்சா, குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை நடைபெறுவது குறித்து தெரியவந்தால்,
மேற்கண்ட செயல்கள் நடைபெறும் இடம் / ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல்களை இரகசியமாக பொதுமக்கள் தெரிவிக்கும் பொருட்டு பின்வரும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொலைபேசி எண்கள் விவரம்: *மாவட்ட ஆட்சித்தலைவர் செல் எண். 9444134000*, *காவல்துறை கண்காணிப்பாளர் செல் எண். 9444212749*, *மதுவிலக்கு பிரிவில் வாட்ஸ் அப் எண்.8248986885*, சென்னை கட்டுப்பாடு அறை கட்டணமில்லா தொலைபேசி எண்.10581.
மேலும் தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.