- முகப்பு
- மாவட்டச் செய்தி
- இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரை கண்டித்து அவரின் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரை கண்டித்து அவரின் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.
செந்தில் முருகன்
UPDATED: Apr 24, 2024, 8:07:54 PM
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர்காடு கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
இக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் 2015ஆம் ஆண்டு கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இக்கோயிலின் சித்திரை பெருவிழா கடந்த 13ம்ஆதேதி துவங்கி பத்து நாள் உற்சவமாக நடைபெற்று வருகிறது.
சம்பந்தர் உழவாரப்பணி மன்றம் சார்பில் நடத்தப்பட்டு வருகின்ற இவ்விழாவில் நேற்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பால்குடம் எடுத்து அபிஷேக ஆராதனை திருவிழா நடைபெற்றது.
அப்போது இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலில் போடப்படும் பாடலால் இடையூறு ஏற்படுவதாக கூறி கோயிலில் பாட்டு போடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து மைக்செட்டை ஆப் செய்து கோயிலில் இருந்த பூஜை பொருட்களை எடுத்து வீசி எறிந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் கோயில் அர்ச்சகரை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாகவும் குற்றம் சாட்டிய பொதுமக்கள், சம்பந்தர் உழவார பணி மன்றம் சார்பாக பாஜகவினர், இந்து முன்னணியினர் பொதுமக்கள் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலகத்தில் பிரச்சனை தொடர்பாக நிர்வாகிகள் பேச சென்ற நிலையில் பொதுமக்கள் இந்துசமய அறநிலையத்துறை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு திருவிழாவிற்கு இடையூறு அளிக்கும் வகையில் செயல்படும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்தும், அர்ச்கரை தரக்குறைவாக விமர்சித்த இந்து சமய அறநிலை துறை இணை ஆணையரை கண்டித்தும் முழக்கமிட்டனர்.
தொடர்ந்து 2 நாட்கள் விழா நடைபெறும் என்று எழுதி கொடுத்து வந்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.