• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற நிலத்தில் குடியேறும் போராட்டத்தில் போலீசருக்கும் பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம். 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற நிலத்தில் குடியேறும் போராட்டத்தில் போலீசருக்கும் பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம். 

L.குமார்

UPDATED: Aug 8, 2024, 11:05:55 AM

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி

அடுத்த செதில்பாக்கத்தில் சுமார் 250 தலித் குடியிருப்புகள் உள்ளன. இதில் பல குடும்பங்கள் ஒரே வீட்டில் பல குடும்பங்கள் ஒரே வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் வீட்டுமனை இல்லாத தகுதி உடைய நபர்களுக்கு ஊராட்சியில் உள்ள அரசு நிலத்தில் இலவச வீட்டு மனை வழங்குமாறு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வருவாய் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

Thiruvallur News

கோரிக்கை மனுவின் மீது வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக விவசாயிகள் சங்க அகில இந்திய துணைத் தலைவர் சண்முகம் தலைமையில் காலியாக உள்ள அரசு நிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

Latest Thiruvallur News

இதைத்தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சிறைபிடிக்கப்பட்டனர். 

அவர்கள் அரசு பேருந்தில் அழைத்துவரப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். 

விவசாயிகள்

மேலும் ஒரு மாதத்திற்குள் தொகுதி உடைய நபர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளனர். 

வாக்குறுதி நிறைவேற்றபட்சத்தில் மீண்டும் போராட்டம் தொடரும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகளும் அப்பகுதி மக்களும் தெரிவித்துள்ளனர்.

 

VIDEOS

Recommended