- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கழிவுநீரை அகற்றாத மாநகராட்சி மற்றும் மேயரை கண்டித்து அருந்ததி பாளையம் மக்கள் சாலை மறியல்
கழிவுநீரை அகற்றாத மாநகராட்சி மற்றும் மேயரை கண்டித்து அருந்ததி பாளையம் மக்கள் சாலை மறியல்
லட்சுமி காந்த்
UPDATED: May 20, 2024, 10:43:03 AM
காஞ்சிபுரத்தில் அவ்வப்போது கோடை மழை லேசாக பெய்து வருகிறது . கோடை வெயிலில் அவதிப்பட்டு வருகின்ற மக்களுக்கு இந்த கோடை மழை சற்று ஆறுதலை அளிக்கின்றது.
இந்நிலையில் மிகவும் லேசாக பெய்த மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு பல்லவர் மேடு அருந்ததி பாளையம் என்ற பகுதியில் கழிவு நீருடன் மழை நீர் தேங்கி வெளியேறாமல் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கழிவுநீரும் மழை நீரூம் சேர்ந்து பலருடைய வீட்டு வாசல் முன்பு சேறும் சகதியுமாக தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் உள்ளது.
இந்தப் பகுதியின் மாமன்ற உறுப்பினர் அதிமுக ஆதரவு பெற்றவர் என்கிற காரணத்துக்காகவே மாநகராட்சியும் திமுக கட்சியின் மேயர் மகாலஷ்மி யுவராஜ் ஆகியோர் இந்தப் பகுதிக்கு எந்த விதமான நன்மையும் செய்து தருவதில்லை .
இப்பகுதியில் தேங்கும் கழிவுநீரை மாநகராட்சி உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் திமுக மேயரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்தும் , தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற மேயர் மற்றும் மாநாட்சி அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பல்லவர் மேடு அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் அண்ணாதுரை அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்த பின்னர் சாலை மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
ஒவ்வொரு பருவமழை காலத்திலும் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது . மாநகராட்சி மேயர் செவிடன் காதில் ஊதிய சங்கு போல உள்ளதாக
மேலும் வரவுள்ள மழைக்காலத்தில், இந்த பகுதியில் மழை நீர் தேங்காதவாறு மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.