கிருஷ்ணகிரி அருகே பழமையான மரங்களை வெட்டி சாய்க்கப்பட்டதால் பரப்பரப்பு.

சசிகுமார்

UPDATED: Sep 13, 2024, 1:08:30 PM

கிருஷ்ணகிரி

அருகே உள்ள ஒரப்பம் கிராமத்தில் ஊர் நத்தம் புறம்போக்கு நிலத்தில் சுமார் 120 ஆண்டுகளுக்கு மேலாக வாரச்சந்தை இயங்கி வருகிறது.

இந்த சந்தை வாரம்தோறும் புதன் கிழமை அன்று சந்தைக்கூடுகிறது, இந்த சந்தையில் ஆடு, மாடுகள் மட்டுமின்றி காய்கறிகள் மளிகைப் பொருள்கள், துணி வகைகள் விற்பனைக்காக ஏராளமான விவசாயிகள் வருவது உண்டு,

இதில் ஆடு, மாடுகளை வாங்க தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியபாரிகளும் வந்து செல்லும் இந்த சந்தை மைதானத்தில் அரசமரம்,, பூவரசு, தேக்கு, உரிகம் உள்ளிட்ட பல்வேறு வகையான காட்டு மரங்கள் உள்ளது, இந்த மரத்தடியின் கீழ் வெயில் நேரங்களில்  வியபாரிகள், விவசாயிகள் பொதுமக்கள் சிறிது நேரம் தங்கிவிட்டு பின்னர் சந்தையில் இருந்து செல்வார்கள்,

Latest Krishnagiri News In Tamil

இந்த நிலையில் சந்தை மைதானத்தில் நின்ற உரிகம், காட்டுவாகை உள்ளிட்ட பல்வேறு மரங்களை சமுக விரோதிகள் சிலர் விடியற்காலையில் வெட்டி சாய்த்துள்ளதை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு பொதுக்கள் திரண்டு வருவதை கண்ட சமுக விரோதிகள் அங்கு இருந்து தப்பி சென்றுள்ளனர்,

Breaking News In Tamil 

இது குறித்து கிராம மக்கள் சந்தையில் பழமை வாய்ந்த மரங்களை வெட்டி விழ்த்திய சமுக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வழியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

பின்னர் இது குறித்து பேசிய ஒரப்பரம் கிராம மக்கள் ஒரப்பம் கிராமத்தில் உள்ள ஊர்நத்தம் அரசு புறம் போக்கு நிலத்தில் வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து இந்த சந்தை இயங்கி வருகிறது, வாரம் தோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வந்து செல்லும் இந்த சந்தையை சிலர் சொந்த கொண்டாடி வருவதல் இது தொடர்பாக நிதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நடைப்பெற்று வருகிறது.

Live updates Tamil

இந்த நிலையில் சந்தை மைதானதில் நின்ற பழமையான மரங்களை சமுக விரோதிகள் சிலர் வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்று விட்டனர், பல ஆண்டுகளாக சந்தை மைதானத்தில் நின்ற மரங்களை வெட்டி சாய்த்த சமுக விரோதிகள் மீது காவல் துறையினர் குற்றவாளிகளை கைது உரிய நடவடிகை எடுக்க வேண்டும் என கிராம மககள் கோரிக்கை விடுத்தனர்.

சந்தை மைதானத்தில் நின்ற மரங்களை வெட்டிய சாய்த்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended