- முகப்பு
- மாவட்டச் செய்தி
- எவ்வித முன்னறிவிப்பு இன்றி ஜெபக் கூடத்தை இடித்து சேதம் ஏற்படுத்தய தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர்.
எவ்வித முன்னறிவிப்பு இன்றி ஜெபக் கூடத்தை இடித்து சேதம் ஏற்படுத்தய தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர்.
சுரேஷ் பாபு
UPDATED: Sep 2, 2024, 1:05:51 PM
திருவள்ளூர் மாவட்டம்
ஈக்காடு பகுதியில் அமைந்துள்ள ஜெபக்கூடத்தை சட்ட விரோதமாக அத்துமீறி எவ்வித முன்னறிவிப்பு இன்றி ஜெப கூடத்தை இடித்து சேதம் ஏற்படுத்தி ஜெபம் நடத்தாதபடி இடைவெளி செய்த தேசிய நெடுஞ்சாலை துறை nh 205 அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் மாநில இயக்குனர் இந்திய சிறுவர் சுவிசேஷ ஐக்கியம் ரவி கிறிஸ்டியன் அவர்கள் கோரிக்கை மனுவை கொடுத்தார்.
Online News Tamil
இந்த மனுவில் 2007 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு கிராம பகுதியில் 20080 சதுர அடிகள் கொண்ட மன எண்கள் 59 மற்றும் 60 முறையாக சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் பெற்று கட்டிடம் கட்டிக் கொண்டு கிறிஸ்தவ ஜெபக்கூடம் அமைத்து நடத்தி வருகிறோம் ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை nh205 நிலத்தை கையகப்படுத்தும் போது மேற்படி எனக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்த எவ்வித உத்தரவும் அல்லது அறிவிப்பும் வழங்கவில்லை.
Breaking News
இடம் குறித்து ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலவில் உள்ளது ஆனால் கடந்த 21.0 8.2024அன்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரிகள் திடீரென்று ஈக்காடு பகுதியில் உள்ள ஜெபக்கூடத்தை சட்ட விரோதமாக பாதி அளவு இடித்துவிட்டு சென்றுவிட்டன.
Latest Thiruvallur District News
இது சம்பந்தமாக எனக்கு எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதனால் நாங்கள் மன உளைச்சல் அடைந்துள்ளோம் என்றும் எங்களுக்கு சொந்தமான இடத்தை எதற்காக இடித்தார்கள் என்ற விளக்கம் வேண்டும் என்றும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களுக்கு இடத்தை மீட்டு தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.