நெமிலி பகுதியில் மர்ம பொருள் வெடிப்பால் கால்நடைகள் தாடை கிழிந்து உயிரிழக்கும் பரிதாப நிலை

பரணி

UPDATED: Jul 17, 2024, 7:16:32 PM

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த திருமால்பூர் ஏரியில் ஏழுமலை என்பவருக்கு சொந்தமான பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது மாங்கொட்டை போன்ற ஒரு பொருளை பசுமாடு கடித்துள்ளது.

அப்போது டமார் என்ற சத்தத்துடன் வெடித்ததில் பசுமாட்டின் வாய் மற்றும் தாடை பகுதி கிழிந்து ரத்தம் கொட்டியது.

சத்தம் கேட்ட நிலையில் மாட்டின் உரிமையாளர் அருகில் ஓடிச் சென்று பார்த்ததில் பசுமாடு வலி தாங்க முடியாமல் துடித்தது.

இதைத்தொடர்ந்து திருமால்பூர் கால்நடைமருத்து வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நெமிலி அடுத்த புன்னைப்பகுதியில் இதே போன்று ஆடு ஒன்று மர்ம பொருளை கடித்து வெடித்ததில் பரிதாபமாக அந்த ஆடு உயிரிழந்தது.

நெமிலியில் நெல், கரும்பு, வேர்க்கடலை அதிக அள வில் பயிரிடப்படுகி­றது. இந்த பயிர்களை காட்டுப் பன்றி நாசம் செய்வதால் காட்டுப் பன்றிகளை சாகடிக்க விவசாயிகள் நாட்டு வெடி மருந்தை மாங்கொட்டையில் மறைத்து வைக்கின்றனர் .

ஆடு மற்றும் மாடுகள் மேயும் போது மாங்கொட்டையை கடிக்கும் போது வெடித்து சிதறி உயிரிழக்கும் பரிதாப நிலை ஏற்படுகிறது.

இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விவசாயிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

 

VIDEOS

Recommended