- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருவாடானை தாலுகாவில் முறையான பராமரிப்பு இல்லாததால் கூட்டுக் குடிநீர் வினியோகம் பாதிப்பு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி.
திருவாடானை தாலுகாவில் முறையான பராமரிப்பு இல்லாததால் கூட்டுக் குடிநீர் வினியோகம் பாதிப்பு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி.
கார்மேகம்
UPDATED: Apr 30, 2024, 10:29:07 AM
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் தான் அதிக நீர் ஆதாரம் உள்ளது இதனால் இப்பகுதியில் குஞ்சங்குளம் கூட்டுக் குடிநீர் திட்டம் மங்கலக்குடி எஸ். பி. பட்டிணம் கூட்டுக் குடிநீர் திட்டம் திணைக்காத்தான் வயல் கூட்டு குடிநீர் திட்டம் தொண்டி கூட்டு குடிநீர் திட்டம் ஆண்டாவூரணி கூட்டு குடிநீர் திட்டம் போன்ற பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.
மேலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது இந்த நிலையில் இந்த கூட்டுக் குடிநீர் திட்டங்கள் அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முறையாக பராமரிக்கப்படாததால் சரிவர செயல்படாமல் ஆழ் குழாய்களில் பழுது ஏற்படுவது குடிநீர் குழாய்களில் ஏற்படும் உடைப்பு போன்ற காரணங்களால் ஒவ்வொரு கிராமத்திற்கும் குடிநீர் வினியோகம் சரியாக கிடைப்பதில்லை இதனால் பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் காவிரி கூட்டுக் குடிநீர் வினியோகம் பெரும்பாலான கிராமங்களுக்கு சரியாக கிடைப்பதில்லை தற்போது கொளுத்தும் வெயில் மற்றும் வறட்சி காரணமாக திருவாடானை தாலுகாவில் உள்ள கிராமப் புறங்களில் பொதுமக்கள் தண்ணீரை தேடி சுட்டெரிக்கும் வெயிலிலும் தள்ளுவண்டிகளில் காலி குடங்களோடு நீண்ட தூரம் அலைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் குழாய்களில் கசிந்து ஓடும் தண்ணீரையும் குடிநீர் குழாய்கள் செல்லும் இடங்களில் வைக்கப்பட்டடுள்ள குடிநீர் வால்வு தொட்டிகளில் கசியும் தண்ணீரையும் சேகரித்து செல்லும் நிலையும் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகின்றனர்
இந்த குடிநீர் பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.