• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கும்பகோணத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்து விடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்து விடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

ரமேஷ்

UPDATED: Jun 20, 2024, 1:37:32 PM

கும்பகோணத்தில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நீரை கர்நாடகம் திறந்து விடுவதை உறுதி செய்யாமல் ஒழுங்காற்றுக் கூட்டத்தை ஒத்திவைத்து காலம் கடத்தி வரும் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தாவின் நடவடிக்கைகளை கண்டித்தும்.

காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு 2023 ஜூன் 1 முதல் 11 வரை கர்நாடகம் தரவேண்டிய 2,054 டிஎம்சி நீரை உடனே பெற்றுத்தர வலியுறுத்தியும்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கான 9 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்து விடுவதற்கு காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு காலம் கடத்தாமல் நடவடிக்கை எடுக்க கோரியும்.

தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜன், தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் செந்தில்குமார், குமரப்பா, ராஜேந்திரன்,ராமலிங்கம், ராதாகிருஷ்ணன், சின்னத்துரை, கல்யாணசுந்தரம், குரு.சிவா, புகழேந்தி, கண்ணழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

 

VIDEOS

Recommended