• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருச்சி அருகே ஊராட்சி மன்ற அலுவலக மின் தேவைகளுக்காக புனித வளனார் கல்லூரியின் மூலம் இன்று காற்றாலை மின்சாரம் பயன்பாடு துவக்க விழா

திருச்சி அருகே ஊராட்சி மன்ற அலுவலக மின் தேவைகளுக்காக புனித வளனார் கல்லூரியின் மூலம் இன்று காற்றாலை மின்சாரம் பயன்பாடு துவக்க விழா

JK

UPDATED: Jul 3, 2024, 5:00:28 AM

திருச்சி மாவட்டம், மணிகண்டன் ஊராட்சி ஒன்றியம், நாகமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை மற்றும் புது தில்லி மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உன்னத் பாரத் அபியான் 2.0 திட்டத்தின் சார்பில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் காற்றாலை இயந்திரதை புனித வளனார் கல்லூரியில் தலைவர் அருட்தந்தை பவுல்ராஜ் மைக்கிள் இன்று காலை துவங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் புனித வளனார் கல்லூரியில் செப்பர்டு விரிவாக்கத்துறை இயக்குனர் முனைவர் சகாயராஜ், நாகமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளைச்சாமி, புனித வளனார் கல்லூரி முதுநிலை ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் இயற்பியல் பேராசிரியர் அலெக்சாண்டர், விரிவாக்கத் துறையின் ஒருங்கிணைப்பாளர் ஜெய்சீலன், முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின், மற்றும் யசோதை, ஜோசப் கிறிஸ்துராஜ், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த காற்றாலை இயந்திரத்தின் மூலம் ஊராட்சி மன்ற அலுவலக மின் பயன்பாட்டிற்காக 1கிலோ வாட் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 8ட்யூப் லைட்டுகள் மற்றும் 4மின்விசிறிகள் இதனை கொண்டு இயக்கலாம்.

 

VIDEOS

Recommended