- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஸ்ரீபெரும்புதூர் மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லும் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு.
ஸ்ரீபெரும்புதூர் மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லும் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு.
லட்சுமி காந்த்
UPDATED: Jun 10, 2024, 7:07:41 PM
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை திடீரென பலத்த சூறைக்காற்று வீசி கன மழை பெய்தது.
இந்த நிலையில் பலத்த சூறைக்காற்றின் போது ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மின் கம்பத்திலிருந்து செல்லும் உயர் மின் கம்பி அறுந்து விழுந்தது.
அந்தப் பகுதியில் வருட கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட துருப்பிடித்த நிலையில் உள்ள இரு சக்கர வாகனங்கள் மீது பரவிய நிலையில் மின் வயர் விழுந்து உள்ளது. நல்வாய்ப்பாக மின் சப்ளை துண்டிக்கப்பட்டதால் யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை.
ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் , பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்திருந்தால் அனைவர் மீதும் மின்சாரம் பாய்ந்து பலர் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கும். பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பே மின்வாரியத்திடம் உயர் மின்னழுத்த கம்பிகள் சரியாக உள்ளதா என கண்காணியுங்கள் என காவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியிருந்தும், மின்வாரிய ஊழியர்களின் மெத்தனப் போக்கினால் மின் வயர் அறுந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.