விதவைகள்களுக்கு மாதந்தோறும் 5 ஆயிரம் உதவித்தொகை வழங்க அரசுக்கு கோரிக்கை

செ.சீனிவாசன் 

UPDATED: Jun 22, 2024, 6:46:43 PM

உலக விதவை பெண்கள் தின நிகழ்ச்சியை முன்னிட்டு நாகையில் விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் விதவைகள் மாநாடு நடைபெற்றது. 

இதனை முன்னிட்டு நாகப்பட்டினம் அவுரிதிடலில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் பதாகைகள் ஏந்தியவாறு பேரணையாக முக்கிய விதிகள் வழியாக வந்த பேரணி மாநாடு திருமண மண்டபத்தில் நிறைவு பெற்றது.

தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில், நாகை மாவட்டத்தின் வேதாரண்யம், கீழ்வேளூர் திருமருகல் தலைஞாயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள் கலந்து கொண்டனர்.

விதவைப் பெண்கள் பூச்சூடி, குங்குமமிட்டு கலந்துக் கொண்டனர். பின் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும்.

மதுவிலக்கை அமல்படுத்தும் வரை குடியால் குடும்பத் தலைவரை இழக்கும் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம், மாதாந்தோறும் 5 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும்.

விதவைப் பெண்களது அனைத்து உரிமைகளையும் பாதுகாத்திட விதவைகள் பாகுபாடு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

VIDEOS

Recommended