வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மருந்து பாட்டிலுடன் வந்த மீனவரால் பரபரப்பு.

செ.சீனிவாசன்

UPDATED: Jun 13, 2024, 11:05:30 AM

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளபள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் இவர் அதே ஊரில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் தனது சொந்த பட்டா நிலத்தை வெள்ளப்பள்ளம் மீனவ பஞ்சாயத்தார்கள் மீனவ பஞ்சாயத்திற்கு தானமாக கேட்டுள்ளனர் இவர் கொடுக்காததால் மீனவ பஞ்சாயத்தார்கள் இவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

அதில் மனமுடைந்து போன காமராஜ் தனது 5 பிள்ளைகளுடனும் குடும்பத்தாருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100 முறைக்கு மேலும் சென்னை தலைமைச் செயலகத்தில் மூன்று முறையும் போராடி உள்ளார் அதில் எந்தவித பயனும் இல்லாததால் விரக்தியில் உள்ளார்.

இன்று வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் வேதாரணியம் வட்டாட்சியர் திலக முன்னிலையில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் அவர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மருந்து பாட்டிலுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார் வரும் 25ஆம் தேதிக்குள் விசாரணை செய்து பரிசீலனை செய்து தீர்வு அளிக்கப்படும் என தெரிவித்தார்.

வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வரும் நிலையில் மருந்து பாட்டிலுடன் மீனவர் ஒருவர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

VIDEOS

Recommended