• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தூங்க தானே போறீங்க என மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதால் சாலை மறியல்

100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தூங்க தானே போறீங்க என மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதால் சாலை மறியல்

சுரேஷ் பாபு

UPDATED: Jun 27, 2024, 7:26:13 PM

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியோடு தாராட்சி, தாமரைக்குப்பம், பேரண்டூர், செஞ்சியகரம் ஆகிய 4 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சி சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு சிபிஐஎம்எல் விடுதலை மாவட்டச் செயலாளர் என்.அன்பு தலைமை தாங்கினார்.

பேரண்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் பானுப்பிரியா துளசிராமன், தாராட்சி ஊராட்சி மன்றத் தலைவர் சிவகாமி சேசுவேல் தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் யசோதா அசோகன், செஞ்சியகரம் ஊராட்சி மன்றத் தலைவர் கட்டம்மாள் லோகநாதன் சிபிஐஎம்எல் நிர்வாகிகள் கே.எம்.சுந்தரம், நந்தகுமார், ரவி, ஞானசேகர், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவக் கல்லூரி சாலையிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை கோரிக்கை வலியுறுத்தி பேரணியாக வருகை தந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஊத்துக்கோட்டை பேருராட்சியுடன் 4 ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இந்த 4 ஊராட்சிகளிலும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருவதால் அடிப்படை வசதிகள் பாதிக்கப்படும்.

அதே போல் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தால் அடைந்த பயன்கள் கிடைக்காமல் போகும். விவசாயக் கூலி தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் கிராமங்கலில் பெரும்பான்மையாகல இருப்பதால் அடு மாடுகள்மேய்க்கும் மேய்ச்சல் நிலத்தை பறிக்கும் நிலை உருவாகும்.

அதே போல் ஊராட்சிகளை பேருராட்சியில் இணைத்தால் வரி செலுத்தும் முறை அதிகமாகும். எனவே இந்த பேரூராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க சென்ற போது, 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் வேலைக்கு செல்லும் நீங்கள், அங்கு தூங்க தானே செல்கிறீர்கள் என கேட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

VIDEOS

Recommended