• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • உடைந்து விழும் நிலையில் மின் கம்பங்கள் கண்டுகொள்ளாத மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்.??

உடைந்து விழும் நிலையில் மின் கம்பங்கள் கண்டுகொள்ளாத மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்.??

ராஜா

UPDATED: Jun 25, 2024, 11:39:49 AM

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

விவசாயமே பிரதான தொழிலான இக்கிராம மக்களின் விவசாய நிலங்கள் இங்கிருந்து ரெங்கசமுத்திரம் செல்லும் சாலையில் உள்ளது.

இந்த விவசாய நிலங்களுக்குள் மிகவும் சேதம் அடைந்து காணப்படும் மின்கம்பங்களால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். 

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்ட மின் கம்பங்களில் கொஞ்சம் கொஞ்சமாக சேதம் ஏற்பட்டு அதில் உள்ள கம்பிகள் முழுவதுமாக வெளியில் தெரிகின்றன. 

மின்கம்பத்தில் அடிபாகம் முதல் உயரத்தில் உள்ள மேல்பகுதி வரை இதுபோலவே காட்சியளிக்கின்றன.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறும் போது இங்குள்ள மின்கம்பங்களில் ஐந்து மின்கம்பங்கள் மிகவும் சேதம் அடைந்து எந்த நேரமும் உடைந்து விழும் நிலையில் இருப்பதாகவும் 

ஒவ்வொரு முறையும் விவசாயப் பணிகள் செய்யும்போது அச்சத்தோடு விவசாய பணிகள் செய்வதாகவும் இது குறித்து பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறுகின்றனர்.

ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended