• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கள்ளக்குறிச்சியில் கால்நடை உதவி மருத்துவர் குடியிருப்பு கட்டடத்தை இடித்து அகற்றுவதற்கு அத்துறை சார்ந்த அலுவலர்கள் எதிர்ப்பு.

கள்ளக்குறிச்சியில் கால்நடை உதவி மருத்துவர் குடியிருப்பு கட்டடத்தை இடித்து அகற்றுவதற்கு அத்துறை சார்ந்த அலுவலர்கள் எதிர்ப்பு.

கோபிநாத் பிரசாந்த்

UPDATED: May 20, 2024, 7:12:04 PM

கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை சாலையில் காவல் நிலையம் எதிரே கடந்த 1924ம் ஆண்டு முதல் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையானது சுமார் 1.44 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தில், உதவி இயக்குநர் அலுவலகம், கால்நடை உதவி மருத்துவர் குடியிருப்பு, நாய் கருத்தடை சிகிச்சை மையம், புற நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் பிரிவு, பிரதம மருத்துவர் அலுவலகம், மருந்து கிடங்கு, சிகிச்சை கூடம் உள்ளிட்ட கட்டடங்கள் உள்ளன. கட்டடங்கள் தவிர்த்து காலி இடம் இருந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் கால்நடை மருத்துவமனை வளாகத்தில், 20 சென்ட் பரப்பளவு கொண்ட காலி இடத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பணிகள் தொடங்கியது. 

எதிர்காலத்தில் மண்டல துணை இயக்குநர் அலுவலகம், உறை விந்து வங்கி கட்டடம், நோய் புலனாய்வு பிரிவு உட்பட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் வரும், எனவே, மருத்துவமனை வளாகத்தில் வேறு துறை சார்ந்த கட்டடங்கள் அமைக்ககூடாது என கால்நடைத்துறை அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில், புதிதாக கட்டப்படும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள கால்நடை உதவி மருத்துவர் குடியிருப்பு அபாயகர நிலையில் இருப்பதாகவும், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடித்து அகற்றுவதாகவும் தெரிவித்து பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டது.

தகவலறிந்த கால்நடைத்துறை விழுப்புரம் மண்டல இணை இயக்குநர் அழகுவேல், கள்ளக்குறிச்சி உதவி இயக்குநர் கந்தசாமி மற்றும் அலுவலர்கள் கட்டடத்தை இடித்து அகற்றுவது தொடர்பாக முன்னறிவிப்பு வழங்கப்படவில்லை,என்றும் கட்டடம் நல்ல நிலையில் உள்ளது எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணிகள் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, மண்டல துணை தாசில்தார் சிலம்பரசன் உத்தரவு ஆணையை காண்பித்தையடுத்து, கால்நடை உதவி மருத்துவர் குடியிருப்பு கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. 

அதேபோல், பழைய தாசில்தார் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள பழங்குடியினர் நலம் மற்றும் வனச்சரக அலுவலக கட்டடங்களும் இடித்து அகற்றப்பட்டன.

 

  • 1

VIDEOS

Recommended