• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சின்னமனூரில் மின்விளக்கு இல்லாத காரணத்தினால் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக கவுன்சிலர் குற்றச்சாட்டு.

சின்னமனூரில் மின்விளக்கு இல்லாத காரணத்தினால் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக கவுன்சிலர் குற்றச்சாட்டு.

ராஜா

UPDATED: Jun 28, 2024, 7:50:26 PM

தேனி மாவட்டம் சின்னமனூர் நகர்மன்ற கூட்டம் தலைவர் அய்யம்மாள் ராமு தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நகர மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமார் மற்றும் அனைத்து கட்சியை சேர்ந்த பெருவாரியான கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 

நகராட்சி ஆணையாளர் கோபிநாத் தலைமையில் நகர் மன்ற உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கமும், தீர்வும் அதிகாரிகள் வழங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது 5வது வார்டு கவுன்சிலர் தமிழ் பெருமாள் பேசும்போது சின்னமனூரில் குறிப்பிட்ட பகுதியில் மின்விளக்கு வசதி இல்லை அதனால் அப்பகுதியில் கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெறுகிறது என்று குற்றம் சாட்டினார்.

மேலும் கஞ்சா விற்பனை குறித்து எனக்கு தெரிகின்ற பொழுது காவல்துறைக்கு தெரியாமல் இருக்குமா என்று பேசியது நகராட்சி கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுத்தியது.

 

VIDEOS

Recommended