- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மீனவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.127-3/4 கோடியில் பல்நோக்கு கடல் பாசி பூங்கா அமைக்கும் பணி.
மீனவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.127-3/4 கோடியில் பல்நோக்கு கடல் பாசி பூங்கா அமைக்கும் பணி.
கார்மேகம்
UPDATED: Sep 26, 2024, 9:20:58 AM
இராமநாதபுரம்
மீனவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.127-3/4 கோடியில் பல்நோக்கு கடல் பாசி பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
( பல்நோக்கு பூங்கா )
ராமநாதபுரம் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் பயன்பெறும் வகையில் திருப்பாலைக்குடியில் மத்திய அரசு சார்பில் கடல் பாசி வளர்க்க நாட்டின் முதல் பல்நோக்கு பூங்கா ரூ.127.71 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது
இந்த பூங்கா அமைக்க கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மீன்வளம் கால்நடைத் துறை மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
மீனவர்கள்
மத்திய அரசு ரூ. 78.77 கோடியும் மாநில அரசு ரூ.48.94 கோடியும் பங்களிப்பில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது இதற்கான டெண்டர்கள் விடப்பட்டு கடந்த ஜனவரி மாதம் முதல் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடந்து வருகிறது.
( ஜனவரிக்குள் முடிக்க நடவடிக்கை)
கடல் பாசி விதைகள் உற்பத்தி ஆய்வகம் உலர் களம் நடைமேடை குடோன் பயிற்சி கூடம் கருத்தரங்க கட்டிடம் போன்றவற்றுக்கான கட்டுமான பணிகள் நடந்து ஏறத்தாழ பாதியளவு பணிகள் முடிவடைந்துள்ளன
அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்த தகவலை மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.