• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சிபிசில் நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

சிபிசில் நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

செ.சீனிவாசன்

UPDATED: May 3, 2024, 9:12:11 AM

நாகை மாவட்டம் நாகூர் அருகே பனங்குடியில் மத்திய அரசின் பொதுப்பணித்துறை நிறுவனமான சிபிசிஎல் ஆலை உள்ளது. ஆலை ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் ஆலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.

இதற்காக 620 ஏக்கர் விவசாய நிலம் பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் ஆகிய பகுதிகளில் இருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளது.

கையகப்படுத்திய நிலத்திற்கு R&R (மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டு தொகை ) உரிய இழப்பீடு வழங்காமல் சிபிசிஎல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதால் பாதிக்கப்பட்ட சாகுபடிதாரர்கள், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சிபிசிஎல் நிறுவனம் நிலத்தை அளவீடு செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடந்த 1ம் தேதி பி பனங்குடி பகுதியில் விவசாய நிலத்தில் பந்தல் அமைத்து இரவில் மின் விளக்கு தேவையான ஜெனரேட்டர்களையும் அமைத்து அங்கு விவசாயிகள் விவசாயக் கூலி தொழிலாளர்கள் சாகுபடி தாரர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் காலவரையற்ற உண்ணாவிரத ஈடுபட்டு வருகின்றனர்.

இப்ப போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது. 

பாதிக்கப்பட்டவர்களின் போராட்டம் படிப்படியாக தீவிரம் அடைந்து வரும் நிலையில் R&R எனப்படும் மறுவாழ்வு மற்றும் மீள்குடி அமர்வு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என தெரிவிக்கும் அவர்கள் இழப்பீட்டுத் தொகை வழங்கும் வரை சிபிசிஎல் நிறுவனம் கைகப்படுத்தப்பட்ட நிலத்தில் நில அளவீடு உள்ளிட்ட எந்த பணிகளையும் தொடங்க அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று அவர்களுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி மற்றும் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் தலைவர் அனந்தகுமார் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். அங்கு செய்திகளிடம் பேசிய ஈசன் முருகசாமி. 

சிபிசியில் நிறுவனம் தொடங்கப்பட்டபோது நிலம் கையகப்படுத்தப்பட்ட நில உரிமை தரர்களுக்கும் கூலி தொழிலாளர்களுக்கும் இழப்பீடு தொகை அந் நிறுவனத்தில் பணி உள்ளிட்டவை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் அங்கு ஏமாற்றப்பட்டதாகவும் இப்பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ள நிலையில் அதையும் மீறி சிபிஎஸ் நிறுவனத்திற்கு நிலம் கைது படுத்தப்பட்டுள்ளது.

கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மற்றும் சாகுபடி தாளர்கள் கூலி தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு இயற்றியுள்ள சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் தமிழக முதல்வர் சிபிசில் நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.

 

VIDEOS

Recommended