• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ரயில்வே துறையில் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என கூறும் மத்திய அரசு தற்போது பணியில் இருக்கும் நபர்களின் வேலையையே பறிக்க பார்க்கிறது.

ரயில்வே துறையில் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என கூறும் மத்திய அரசு தற்போது பணியில் இருக்கும் நபர்களின் வேலையையே பறிக்க பார்க்கிறது.

JK

UPDATED: Nov 14, 2024, 1:20:00 PM

திருச்சி

ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் டிசம்பர் 4, 5, 6-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

எனவே ரயில்வேயின் 17மண்டலங்களில் பணியாற்றும் 12.20 லட்சம் ஊழியர்களின் ஆதரவைப் பெற ரயில்வே தொழிற்சங்கங்களின் சம்மேளனங்கள் தயாராகி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சியில் உள்ள தொழிலாளர்களிடையே ஆதரவு திரட்டுவது தொடர்பாக எஸ் ஆர் எம் யூ சங்க பொதுச் செயலாளர் கண்ணையா திருச்சி வந்து அவர் எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினரிடையே உரையாற்றினார். 

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொதுச்செயலாளர் கண்ணையா மத்திய அரசு டிராக் மீட்டர்களை 40% வரை குறைக்க வேண்டும் என கூறுகின்றனர்.

மத்திய அரசு

ரயில்வே துறையில் மத்திய அரசு இளைஞர்களுக்கு வேலை என கூறுகிறது ஆனால் இருப்பவர்களுக்கே வேலை பறிபோகும் நிலை உள்ளது. 

4500 வந்தே பாரத் ரயில்கள் தனியாருக்கு  கொடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

ஐ சி எப்-ல் ரயில்களை உற்பத்தி செய்யும் போது ரயில்வே துறைருக்கு 98 கோடிக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது.

தற்போது தனியாரிடம் கொடுக்கப்பட்ட போது ரஷ்யா நிறுவனத்திற்கு 130 கோடியும் மற்ற நிறுவனங்களுக்கு 200 கோடிக்கு கொடுத்துள்ளனர். 

ரயில்வே துறை

ரயில் பெட்டிகளை தயாரிக்கும் நிறுவனமே 35 வருடங்களுக்கு பராமரிப்பையும் மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்கள் இதனால் ரயில்வே ஊழியர்களின் பணி பாதிக்கப்படுகின்றது. இதனால் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனை எஸ் ஆர் எம் யூ எதிர்க்கிறது. 

மத்திய அரசின் இந்த செயல்பாடுகள் குறித்து மக்களிடையே எடுத்து கூறி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என்றார்.

 

VIDEOS

Recommended