- முகப்பு
- மாவட்டச் செய்தி
- காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் முதல் ஊழியர்களின் ஊழல்களை விசாரணை செய்திட கோரி பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் முதல் ஊழியர்களின் ஊழல்களை விசாரணை செய்திட கோரி பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
லட்சுமி காந்த்
UPDATED: Jul 20, 2024, 1:50:44 PM
Latest District News in Tamil
காஞ்சிபுரம் மாநகராட்சியில் நடைபெற்ற முறைகேடுகளையும், ஊழலையும் கண்டித்து, விசாரணை கமிஷன் அமைக்கவும், மாநகராட்சி நிர்வாகதை கலைத்து விட்டு,புதிய தேர்தல் நடத்திடவும், ஊழல் செய்த மாநகராட்சி மேயர் முதல் ஊழியர் வரை அனைவரையும் விசாரணை செய்யக்கோரியும் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் தாலுக்கா அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்படம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சி
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் சீர்கேட்டை கண்டித்தும், பாதாள சாக்கடை, மஞ்சள் நீர் கால்வாய் தூர்வாருதல், குடியிருப்புக்கு அனுமதி அளித்தல், உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பல கோடி ரூபாய் ஊழல் செய்த மாநகராட்சி மேயர் முதல் மாநகராட்சி உறுப்பினர்கள் வரை அனைவரையும் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மீண்டும் புதிய தேர்தல் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன முழக்கங்களை எழுப்பியும், கைகளில் பதாகைகளையும் ஏந்திக்கொண்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
News
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மக்கள் பணிகளை பார்க்காமல் கமிஷன் பெறுவதிலேயே குறிப்பாக உள்ளது தொடர்பாக மாவட்ட ஆட்சியரும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.