- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஆற்காடு நகரில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 223 வது நினைவேந்தல் விழா.
ஆற்காடு நகரில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 223 வது நினைவேந்தல் விழா.
பரணி
UPDATED: Oct 27, 2024, 10:27:07 AM
ராணிப்பேட்டை மாவட்டம்
ஆற்காடு நகரில் மருது பாண்டியர்களின் 223 வது குருபூஜை மற்றும் நினைவேந்தல் விழா 27/10/2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் முக்கிய நிகழ்வான மாமன்னர் மருது சகோதரர்கள் உருவப்படத்தை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக ஆற்காடு அண்ணாசாலை முதல் புதிய வேலூர் மெயின் ரோடு, பேருந்து நிலையம் பஜார் வழியாக சென்று தனியார் திருமண மண்டபம் வரை ஊர்வலமாக சென்றனர்.
மருது பாண்டியர்களின் 223 வது குருபூஜை
பின்னர் திருமண மண்டபத்தில் உள்ள மாமன்னர்களின் திரு உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர் கருணாஸ் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்.
மேலும் இவ்விழாவில் அக்டோபர் 24 மருது சகோதரர்கள் இயக்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு இரு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது 1)ஆற்காடு பைபாஸ் சாலையில் மருது சகோதரர்கள் திரு உருவ சிலை நிறுவப்பட வேண்டும் 2) ஆர்காட்டில் புதியதாக கட்டப்படும் பேருந்து நிலையத்திற்கு இரட்டை சகோதரர்கள் பெயரை வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
Latest Arcot News
அக்டோபர் 24 மருது சகோதரர்கள் இயக்கத்தின் தலைவர் வேலூர் அப்பு பாலாஜி தலைமையில் விழா குழுவினர்கள் விழாவினை சிறப்பாக நடத்தினர் விழாவில் சிறுவர்களின் கலை நிகழ்ச்சியான பரதநாட்டியம், சிலம்பம், சிறப்பாக நடைபெற்றது .
மேலும் விழாவில் ஆற்காடு அகமுடையார் சங்கத்தினர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வியாபாரிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக நடத்தினர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது .