- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையின் மெத்தன போக்கை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையின் மெத்தன போக்கை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ராஜா
UPDATED: Jul 5, 2024, 3:45:09 PM
தேனி மாவட்டம் உத்தமபாளையம் 1வது வார்டு காளியம்மன் கோவில் தெரு, உ. புதூர் பகுதியைச் சேர்ந்த முத்தையா மகன் முத்து மற்றும் அவரது சகோதரர் முரளி ஆகிய இருவரும் சேர்ந்து விவசாய செய்து வருகின்றனர்.
பசுமாடுகளை வைத்து பால் கறந்து விற்பனை செய்து வரும் இவர்கள் மாடுகளுக்கு தீவனமாக ஆயிரம் கட்டு வைக்கோல் போர்களை வாங்கி இவரது இடத்தில் வைத்திருந்தனர்
இவர்களின் வீட்டின் பின்புறப் பகுதியில் 14 அடி பொது பாதை உள்ளது பொதுப் பாதையை ஆக்கிரமித்த சில பேர் கடந்த மாதம் (22. 4 .2024) ஆம் தேதி இது தொடர்பாக தகராறு ஏற்படவே அன்று என்னையும் எனது சகோதரரையும் அடித்து கொலை செய்து விடுவதாகவும்
எங்களது வாழ்வாதாரமான பசுமாடுகளையும் தீவனங்களையும் தீ வைத்து கொளுத்தி விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த வீட்டின் பின்புற பகுதியைச் சேர்ந்த முத்து மாடன் மகன் சின்னமாகி என்ற பெரிய மாடசாமி பெரிய மாயி என்ற பெரிய மாடசாமி தவக்கா என்ற குற்றாலம் கருத்த கண்ணன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தது போல் அன்று இரவு சுமார் 11 மணி அளவில் 5 லட்சம் மதிப்பிலான வைக்கோல் போர்களை தீ வைத்து அளித்து விட்டதாக உத்தமபாளையம் காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளார்.
ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து தமிழ் புலிகள் கட்சி கடந்த (09.06.24) தேதி உத்தமபாளையம் பைபாஸ் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக இந்த நான்கு பேரையும் விசாரணை செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் விவசாயிகள் முத்து மற்றும் முரளி ஆகியோருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் ஆவணம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் ஒரு தலைப்பட்சமாக செயல்படும் உத்தமபாளையம் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடமும் முத்து மற்றும் முரளி ஆகியோர் இன்று புகார் மனுவை அளித்தனர்.