• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நாகர்கோவில் மாநகராட்சி மேயரின் அராஜக அத்துமீறலை வன்மையாக கண்டிக்கிறது தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்.

நாகர்கோவில் மாநகராட்சி மேயரின் அராஜக அத்துமீறலை வன்மையாக கண்டிக்கிறது தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்.

முகேஷ்

UPDATED: Jul 3, 2024, 9:14:53 AM

நாகர்கோவில் மாநகராட்சி மேயரின் விவேகமற்ற அராஜக அத்துமீறலை வன்மையாக கண்டிக்கிறது தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்.

சப் கலெக்டர் ஜனார்த்தனன் முதல் துப்புரவு பணியாளர் இசக்கி வரை மேயர் ரெ.மகேஷின் தொடர் அராஜகத்திற்கு எப்போதுதான் முற்றுப்புள்ளி???

இயற்கை சீற்றங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் மட்டுமில்லாமல், அன்றாட வாழ்வில் துப்புரவுப் பணியாளர்கள் இல்லாமல் நமது வாழ்வு இல்லை. 

நாடும் வீடும் தூய்மையாக இருக்க மற்றவர்களின் கழிவுகளையும் குப்பைகளையும் அப்புறப்படுத்தினாலும் நாள்தோறும் அவர்கள் தங்களின் உடல், உடைகளில் அசுத்தங்களைச் சுமக்கிறார்கள் என்பது மறுக்க இயலாத உண்மை.

தினம் தினம் அசுத்தங்களை மட்டுமல்ல பல அநீதிகளையும் தொடர்ச்சியாக சுமந்து கொண்டிருக்கின்ற துப்புரவு பணியாளர்கள் பாலமுருகன், சரத்குமார், இசக்கியப்பன் ஆகியோரை கடந்த 20-06-2024 அன்று நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் அவர்கள் கண்மூடித்தனமாக தாக்கியதோடு 3 நாட்கள் பணி இடை நீக்கமும் செய்துள்ளார்.

3 நாட்கள் பணி நீக்கம் பணி இடை நீக்கம் என்பதை உங்களது துறை சார்ந்த செயல்பாடு என நாங்கள் அதை விமர்சிக்க வரவில்லை ஆனால் அப்பாவி துப்புரவு பணியாளர்களை இவன அடித்தால் இவன் எதிர்த்து அடிக்க மாட்டான் என்ற தைரியத்தோடு அவர்களை விவேகமற்று தாக்கிய மேயர் மகேஷின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

துப்புரவு பணியாளர்கள் வேலையில் சுணக்கம் ஏற்பட்டிருக்கலாம் தவறுதலாக சில தவறுகளை செய்திருக்கலாம் அதை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை ஆனால் படித்தவர், வழக்கறிஞர் மாநகராட்சி மேயர் அரசியல் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் என பன்முகத்தன்மை கொண்டு பல்வேறு அடையாளங்களை கொண்டு தற்போது அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு அப்பாவிகளை தாக்குவது எந்த விதத்தில் நியாயம்???

இவன அடித்தால் இவன் புகார் கொடுக்க மாட்டான் இவனை அடித்தால் இவன் எதிர்த்து கேட்க மாட்டான் என்கிற ஆணவத்தோடு எதிர்த்து எதிர்த்துப் பேச திராணியற்ற மனிதர்களிடம் எதிர் தாக்குதல் நடத்த முடியாத மனிதர்களிடம் தாக்குதல் நடத்துவது நாகரீகமான செயலா இந்த செயல் மனிதநேயமற்ற செயல், மன்னிக்க முடியாத செயல். 

ஆனால் ஆளுகின்ற அரசும் வேடிக்கை பார்க்கிறது, நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையும் மௌனம் காக்கிறது, கேள்வி கேட்க வேண்டிய அதிகாரிகளும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள். 

இதுபோன்று அநாகரிகமான மனிதநேயமற்ற செயலை தடுக்க வேண்டியது அரசின் கடமையும் சமூகநீதி பேசுகின்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் கடமையுமாகும்.

அப்பாவி துப்புரவு பணியாளர்களை கொடூரமாக தாக்கிய நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்யக்கோரி விரைவில் செய்யப் போவதாக தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

 

VIDEOS

RELATED NEWS

Recommended