- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் குன்றத்தூர் அருகே பயங்கர விபத்து.
தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் குன்றத்தூர் அருகே பயங்கர விபத்து.
S.முருகன்
UPDATED: Jun 30, 2024, 5:25:55 PM
கிழக்கு தாம்பரத்தை சேர்ந்தவர் ராபின் சாமுவேல்(40), மதுரவாயல் அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று வேலை முடித்துவிட்டு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார் தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ், குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது டாக்டர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்த சாலையின் தடுப்பு சுவரின் மீது ஏறி வேகமாக சென்றதில் எதிர் திசையில் வந்த காரின் மீது நேருக்கு நேர் மோதியதில் இரண்டு கார்களும் அப்படியே அப்பளம் போல் நொறுங்கியது
இதில் காரை ஓட்டி வந்த டாக்டர் ராபின் சாமுவேல் காருக்குள் அப்படியே நசுங்கி பரிதாபமாக இறந்து போனார். எதிரே வந்த காரில் வந்தவர்கள் ரத்த காயங்களுடன் துடித்தனர்.
இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்
இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் விபத்தில் சிக்கியது மயிலாடுதுறையை சேர்ந்த முருகன்(42), இவரது மனைவி மேகலா(39), இவர்களது மகன் பிரசன்னா(22), மற்றொரு மூன்று வயது சிறுவன் மற்றும் காரை ஓட்டி வந்த கணேஷ் குமார்(36), ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது தெரியவந்தது.
மேலும் முருகன் தனது மகனை சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்ப்பதற்காக இன்று அழைத்து வந்த போது டாக்டர் வேகமாக ஓட்டி வந்த கார் மோதியதில் விபத்தில் சிக்கியது தெரியவந்தது
இதையடுத்து இறந்து போன டாக்டர் ராபின் சாமுவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த விபத்தால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் சாலையின் குறுக்கே இருந்த இரண்டு கார்களும் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பின்னர் லாரி மற்றும் கிரேன் மூலம் விபத்தில் சிக்கிய இரண்டு கார்களை அப்புறப்படுத்தினார்கள்.
மேலும் கார்களை அப்புறப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த போக்குவரத்து போலீசாரும், பொதுமக்களும் இணைந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினார்கள்.