• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருவேற்காட்டில் கூவம் ஆற்றங்கரை குடியிருப்புகளை அகற்ற கணக்கெடுப்பு குடியிருப்புவாசிகள் கடும் எதிர்ப்பு.

திருவேற்காட்டில் கூவம் ஆற்றங்கரை குடியிருப்புகளை அகற்ற கணக்கெடுப்பு குடியிருப்புவாசிகள் கடும் எதிர்ப்பு.

S.முருகன்

UPDATED: May 2, 2024, 11:55:49 AM

திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் 250 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

குறிப்பாக கூவம் நதிக்கரையை ஒட்டி மேடான பகுதியில் அமைந்துள்ள இந்த குடியிருப்புகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும் நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த குடியிருப்புகள் இருப்பதாக கூறி அகற்றுவதற்காக வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் தலைமையில் பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ் மற்றும் வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை கணக்கெடுக்கும் பணிக்காக குடியிருப்புகளுக்கு வந்தனர் இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கோட்டாட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வீடுகளை அகற்றுவது குறித்த உத்தரவு நகலை பொதுமக்கள் கேட்டனர்.

அதற்கு ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் கூறியதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் ஒவ்வொரு அளவீடு செய்யப்பட்ட வீடுகளுக்கும் ஊழியர்கள் பெயிண்ட் மூலம் குறியீடு செய்து விட்டு சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

 

  • 1

VIDEOS

Recommended