கிராம பொதுமக்கள் காலி குடங்களுடன் அரியலூர்-திட்டக்குடி சாலையில் திடீர் சாலை மறியல்.

மாரியப்பன்

UPDATED: Apr 21, 2024, 7:25:19 PM

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வயலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட வ.கீரனூர் கிராமத்தில் கடந்த சில மாதங்கலாகவே ஊராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து கிராம மக்கள் பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ன தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வ. கீரனூர் கிராம மக்கள் குடிநீர் தொடர்ந்து வராததை கண்டித்தும் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று அரியலூர்-திட்டக்குடி சாலையில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடும் வெயிலிலும் பொதுமக்கள் அதிகாரிகள் சம்பவத் இடத்திற்க்கு வரும் வரை சாலை மறியல் தொடரும் என தெரிவித்து வெயிலிற்காக பின்னர் சாலையில் சாமியான பந்தலமைத்து மறிலில் ஈடுபட்டனர்.

பின்னர் அதிகாரிகள் அங்கு வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை எடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் எதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

  • 3

VIDEOS

Recommended