அரசு பேருந்துகளில் திடீர் ஆய்வு !!!

கோபி பிரசாந்த்

UPDATED: Apr 29, 2024, 6:44:04 PM

கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து சென்னை, பெங்களூரு, திருப்பதி, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்ட பகுதிகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் செல்கின்றனர். 

பயணிகளின் வசதிக்காக கள்ளக்குறிச்சி அரசு பனிமலைகளில் இருந்து 69 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும், மாவட்டத்திற்குள் உள்ள கிராம பகுதிகளுக்கு 30 பேருந்துகள், முன்னெச்சரிக்கையாக 9 பேருந்துகள் என மொத்தமாக 108 பேருந்துகள் கள்ளக்குறிச்சி அரசு பேருந்து பனிமலைகளில் உள்ளன.

தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா உத்தரவின்பேரில், அரசு பேருந்துகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேருந்தின் தரைத்தளம், படிக்கட்டுகள், இருக்கைகள், மேற்கூரை, லைட்டுகள், பிரேக், பேருந்துகள் சரியான தேதியில் பழுது நீக்கி பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விழுப்புரம் தலைமையகம் மற்றும் சங்கராபுரம் அரசு பேருந்து பனிமலைகளில் பணிபுரியும் துணை மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

 

  • 1

VIDEOS

Recommended