இயற்கை உணவின் அவசியத்தை வலியுறுத்தி காய், கனிகள் மீது ஏறி மாணவர்கள் யோகா.

அந்தோணி ராஜ்

UPDATED: Sep 29, 2024, 12:49:28 PM

ராஜபாளையம்

பாரதி நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் யுனைடெட் யோகா மற்றும் ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காய்கறி மற்றும் கனிகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காய், கனிகள் மீது அமர்ந்து பத்மாசனம், பர்வதாசனம், பவிஷ்ட கோணாசனம், சக்ராசனம், விருச்சிகசனம் உட்பட பல்வேறு ஆசனங்களை காய்கனிகள் மீது அமர்ந்து எவ்வித சேதமும் இன்றி மூன்று சுற்றுகளாக செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

யோகாசனம்

ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் காய்கனிகள் மீது அமர்ந்து யோகாசனம் செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக இயற்கை விவசாயி மணி சிறப்புரையாற்றினார்.

தொழில் அதிபர் டைகர் சம்சுதீன் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். விழா ஏற்பாடுகளை யோகா பயிற்சியாளர் முத்துக்குமார் செய்திருந்தார்.

 

VIDEOS

Recommended