ராஜபாளையம் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு மைதானம் அமைத்து தர கோரிக்கை.

அந்தோணி ராஜ்

UPDATED: Oct 7, 2024, 6:29:50 PM

விருதுநகர் மாவட்டம்

ராஜபாளையம் அருகே நல்லமங்கலம்  பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேலவரகுணராமபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்கள் பயின்று வரும் அரசு உதவி பெறும் பள்ளி சிவந்தி ஆதித்தனார் மேல் நிலைப்பள்ளி

இந்தப் பள்ளியில் சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

தற்பொழுது தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் முழுவதும் தமிழக முதல்வர் கோப்பை போட்டிகள் மாவட்ட வாரியாக நடைபெற்ற வந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற முதல்வர் கோப்பை போட்டியில் முறையான விளையாட்டு மைதானம் எதுவும் இன்றி முள்ளு காட்டிற்குள் கால்பந்து விளையாடி பயிற்சி பெற்ற இப்பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

கால்பந்து

இதில் மாணவியர்கள் அணி கால்பந்து பிரிவில் பங்கேற்று அனைத்து சுற்றிலும் வெற்றி பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர்.

மேலும் நான்கு மாணவியர்கள் மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் சார்பில் இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம்

கோரிக்கை மனு கொடுத்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் நல்ல மங்கலம் கண்மாயில் இருந்து விளையாட்டு மைதானத்தை 40 யூனிட் சவுடுமண் எடுக்க அனுமதிவழங்கியுள்ளார். 

Latest Online News In Tamil

ஆனால் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் 14 யூனிட் சவுடு மண் மட்டுமே கண் துடைப்பிற்காக பள்ளி மைதானத்தில் கொட்டப்பட்டுள்ளது.

மேலும் செப்பனிடும் பணிகள் ஏதும் நடைபெறவில்லை என மாணவ. மாணவியர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended