- முகப்பு
- மாவட்டச் செய்தி
- காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூரில் செயல்பட்டு வரும் எஸ் எச் சி எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஒன்பதாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம்.
காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூரில் செயல்பட்டு வரும் எஸ் எச் சி எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஒன்பதாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம்.
லட்சுமி காந்த்
UPDATED: Jun 27, 2024, 11:53:51 AM
காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம். இம்மாவட்டத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநில தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் நீர்வள்ளூர் ஆரியம்பாக்கம் கிராமத்தில் எஸ்.எச்.சி. என்ற எலக்ட்ரானிக் தொழிற் நிறுவனம் இயங்கி வருகின்றது . இதில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனம் சாம்சங் நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் தயாரித்து அளித்து வருகிறது .
இந்நிலையில் இதில் கடந்த 15 வருடங்களாக பணிபுரிந்து வந்த 12 தொழிலாளர்களை திடீரென்று இந்த நிறுவனம் பணி இடை நீக்கம் செய்தது இதனால் அவர்கள் தங்களது வாழ்வாதாரம் தடைபடவே செய்வதறியாமல் அதிர்ச்சியுற்றனர்.
இந்த நிறுவனத்தில் சிஐடியு தொழிற்சங்கம் தொடங்கிய காரணத்தை முன்னிறுத்தி நிர்வாகத்தினர் 12 தொழிற்சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து பணி இடை நீக்கம் செய்தது.
இந்த நிலையில் பாதிக்கபட்ட 12 தொழிலாளர்களும் , தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனவும், தொழிற்சங்க உரிமைகளை நசுக்க கூடாது எனவும் தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடக் கோரியும், வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் 9 வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை நிர்வாகம் உடனடியாக வாபஸ் பெறாவிட்டால் திங்கள் கிழமை அன்று சாம்சங் நிறுவனத்தின் முன்பு மிகப்பெரும் போராட்டம் நடைபெறுவதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.
வேலை நிறுத்தத்தை ஒன்பதாவது நாளாக தொடர்ந்து கடைபிடித்து வரும் தொழிலாளர்களுக்கு சிஐடியு மாநில செயலாளர் இ.முத்துக்குமார், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.நேரு, சிஐடியு மாவட்ட தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
பேட்டி. முத்துக்குமார்.சிஐடியு மாநில செயலாளர்.