- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சேதமடைந்த சாலையில் விபத்து ஏற்படாமல் தடுக்க ஃபிரிட்ஜில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்காலான தெர்மாகோல் அட்டையை வைத்த விநோதம்.
சேதமடைந்த சாலையில் விபத்து ஏற்படாமல் தடுக்க ஃபிரிட்ஜில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்காலான தெர்மாகோல் அட்டையை வைத்த விநோதம்.
லட்சுமி காந்த்
UPDATED: May 31, 2024, 12:05:03 PM
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றது. ஒரகடம் , படப்பை சுற்றிலும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் பன்னாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ,வாலாஜாபாத் ,ஒரகடம், படப்பை, வண்டலூர், தாம்பரம், சென்னை மார்கமாக நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், இருசக்கர வாகனங்களும் பயணிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி தாம்பரம் வாலாஜாபாத் சாலை நான்கு வழி சாலையாக அமைக்கப்பட்டு வருவதால் அனைத்து வாகனங்களும் மிக வேகத்தில் செல்லுகின்றன.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நெடுஞ்சாலையில் வாலாஜாபாத் படப்பை நெடுஞ்சாலையில் சாலமங்கலம் ஊராட்சி அருகே 3 அங்குல ஆழத்துக்கு 15 அடி பரப்பளவில் சாலை சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர் .
அதிலேயும் குறிப்பாக பைக்கில் செல்பவர்கள் ஏற்ற இறக்கமாக உள்ள இந்த சாலையில் வாகனத்தை கட்டுப்படுத்த இயலாமல் திடீர் பிரேக் அடித்து கீழே விழுவது வாடிக்கையாகிவிட்டது என அங்குள்ள வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
மிக வேகமாக வருகின்ற வாகனங்கள் ஏற்ற இறக்கமாக உள்ள இந்த பள்ளத்தில் விழுந்தால் கண்டிப்பாக காயம்படாமல் தப்பிக்க இயலாது எனவும் தெரிவிக்கின்றனர்.
தொழிற்சாலைகளுக்கு செல்கின்ற இளைஞர்களும் தனியார் வாகனங்களும் வேகமாக செல்லும்போது இந்தப் பள்ளங்களில் விழுந்து படுகாயம் அடைய வாய்ப்பு உள்ளது.
எனவே நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சேதமடைந்த இதுபோன்ற சாலைகளை சீர்படுத்த வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.