• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நாகை அருகே செம்பியன் மகாதேவி ஆலய தேரோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டியதால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி

நாகை அருகே செம்பியன் மகாதேவி ஆலய தேரோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டியதால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி

சீனிவாசன்

UPDATED: Apr 22, 2024, 1:32:07 PM

நாகப்பட்டினம் மாவட்டம் செம்பியன் மகாதேவி ஊராட்சி பழமை வாய்ந்த அருள்மிகு கைலாசநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயத்தில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா 10 நாட்களாக நடைபெற்ற வருகிறது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. 

ஆலய வளாகத்தில் இருந்து பக்தர்கள் தேர்வினை வடம் பிடித்து இழுக்க தொடங்கிய சற்று நேரத்தில் தேரோடும் வீதியில் ஓரங்களில் அமைந்திருந்த தென்னை புங்கை மரங்கள் தேருக்கு இடையூறு ஏற்படுத்தின.

இதனால் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஐந்துக்கும் மேற்பட்ட தென்னை புங்கை வேப்ப மரங்கள் அடியோடு வெட்டி வீழ்த்தப்பட்டது

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் நிழல் தரும் மரங்களை வெட்டி வீழ்த்தியதற்கு சமூக ஆர்வலர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டை விட இந்த ஆண்டு தேரில் சுற்றளவு அதிகரித்ததாலும் சரியாக அளவீடு செய்யாமல் தேர் கட்டும் பணி நடைபெற்றதால் இந்த இடையூறு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன.

சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலான மரங்கள் வெட்டியதற்கு மாற்றாக ஆலயத்தைச் சுற்றி நிழல்தரும் மரங்களை நடவு செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended