- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.ஐ. மூளைச்சாவு அடைந்து பலி.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.ஐ. மூளைச்சாவு அடைந்து பலி.
லட்சுமி காந்த்
UPDATED: Aug 13, 2024, 4:56:19 AM
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு
அருகே முதுகூர் பகுதியை சேர்ந்தவர் பழனி (58). இவர் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 9 ம் தேதி அவரது மனைவி புவனேஸ்வரி(56) உடன், பூந்தமல்லியில் இருந்து பூஜை பொருட்கள் வாங்கிகொண்டு, மண்ணுார் சாலை வழியே இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
சின்ன வளர்புரம் அருகே வந்த போது , இருசக்கர வாகனத்தின் பின் டயர் பஞ்சர் ஏற்பட்டது. இதில் நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். விபத்தில் மயக்கமடைந்த எஸ்.ஐ., பழனியை மீட்டு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மூளைச்சாவு
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் தனியார் மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ளது.
பழனியின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் தர முன்வந்தனர். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவரையில் போதிய குளிர்சாதன வசதி இல்லை.
இதனால் உடல் உறுப்பு தானம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உயிரிழந்த பழனியின் உடல் தனியார் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு