இந்து சமய அறநிலையத் துறைக்கு சிவசேனா கண்டனம்.

Admin

UPDATED: Apr 21, 2024, 7:41:17 PM

20.4.2024 தஞ்சைப் பெரியகோயில் பெருவுடையார் திருக்கோயில் திருத்தேர் பவனி வீதி உலா இலட்சக் கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் சிறப்பு மிக்க திருவிழாவாகும்,

இந்த ஆண்டு இந்துசமய அறநிலையத்துறை, அரசு அதிகாரிகள் அலட்சியத்தால் தேர் புறப்பட்ட இடத்திலிருந்து கட்டிடங்கள், மின் கம்பங்கள் மோதல், மின்சார ஒயர்கள் அறுப்பட்டன, இரண்டு மின்சார ஊழியர்கள் காயப்பட்டு மருத்துவ மனையில் அனுமதி,

இதற்கு எல்லாம் அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம, 2023 களிமேடு தேர்சப்பிர ஊர்வலத்தில் மின்சார தீ விபத்தால் 11 நபர்கள் உயிர் இழப்பு, 25 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழக்கு விழாவில் 57 நபர்கள் உயிர் இழப்பு,

இச்செயலுக்கு எல்லாம் இந்து சமய அறநிலையத்துறை, அரசு அதிகாரிகளே பொறுப்பு, எனவே இந்த ஆண்டு நடை பெற்ற பெரிய கோயில் தேரோட்டம் பல இடையூறுகள் ஏன்? சரியான திட்டமிடல் இன்றி நடை பெற்றதற்கு என்ன காரணம்? தீவிர விசரனை செய்து, தமிழக அரசே, அறநிலையத் துறையே உரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு என்று சிவசேனா மாநில செயல் தலைவர் சசிகுமார் கேள்வி எழுப்பினார்.

 

  • 3

VIDEOS

Recommended