கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுமி உட்பட ஏழு பேருக்கு எலி காய்ச்சல்.

கோபி பிரசாந்த்

UPDATED: Jul 8, 2024, 6:58:40 PM

Latest Dindigul News & Live 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் அருகே வடதரசலூர் கிராமத்தில் உள்ள மூப்பனார் கோவில் தெருவில் வசித்து வரும் பொது மக்கள் சிலருக்கு திடீரென வாந்தி மயக்கம் மட்டும் லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

இதை எடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு மற்றும் மருத்துவக் கல்லூரி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர்.

அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்ததில் சிகிச்சை பெற்று வந்த அனைவருக்கும் எலிக்காய்ச்சல் நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

எலிக்காய்ச்சல் நோய்

பின்னர் அரசு சுகாதார நிலைய மருத்துவர்கள் அந்த ஊரில் உள்ள அனைத்து இடங்களிலும் சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் தெளித்தும், அந்த ஊரில் உள்ள குடிநீர் தொட்டிகளை ஊராட்சி ஊழியர்களைக் கொண்டு சுத்தம் செய்தனர்.

மேலும் எலி காய்ச்சல் இருக்கும் அறிகுறிகளாக தலைவலி, உடல் வலி,வயிற்று வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு, குளிர் காய்ச்சல், கண் சிவப்பு இது போன்ற அறிகுறிகள் ஏற்படும் எனவும்

Latest District News 

இதுபோல அறிகுறிகள் பொதுமக்களுக்கு இருப்பின் தாமாக முன் வந்து சிகிச்சை பெற வேண்டும் என்றும் இவையாவும் சரியாக கவனிக்க நேரிட்டால் , உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் செயலிழக்கும். 

மூளை கல்லீரல் நுரையீரல் போன்ற பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்படும். உடல் பாதிப்பு ஏற்பட்டு மலத்தில் கலந்து இரத்த கசியலாம். 

இந்த அறிகுறிகள் இருந்து கவனிக்க நிறுத்தால் உயிருக்கு ஆபத்து கூட ஏற்படலாம் என்றும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended