• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கிரீமிலேயர் பரிந்துரையை கண்டித்து எஸ்சி/எஸ்டி ரயில்வே தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

கிரீமிலேயர் பரிந்துரையை கண்டித்து எஸ்சி/எஸ்டி ரயில்வே தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

JK

UPDATED: Aug 28, 2024, 12:46:48 PM

திருச்சி

அகில இந்திய எஸ்சி/எஸ்டி ரயில்வே தொழிற்சங்கத்தின் சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் ரயில்வே கோட்ட முதன்மை அலுவலர் அலுவலகம் முன்பு எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு க்ரீன்லையர் பரிந்துரையை கண்டித்து தென்மண்டல துணைத் தலைவர் இசக்கிமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன உரையை விழுப்புரம் பிரிவு செயலாளர் முருகவேல், பொருளாளர் தியாகராஜன் ஆகியோர் வழங்கினர்.

கிரீமிலேயர்

ஆர்ப்பாட்டத்தின் போது உச்சநீதிமன்ற நீதிபதி ஆலோசனைப்படி கிரிமிலேயர் என்ற முறையில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை எஸ்.சி/எஸ்.டி மக்களுக்கு அரசாங்கம் கொண்டுவர பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

இதனை கண்டித்து கிரிமிலேயர் சட்டம் தற்போது எஸ்சி/எஸ்டி மக்களுக்கு நடைமுறை இல்லை இதை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை வழங்கியதை கண்டித்தும், பரிந்துரையை நடைமுறைப்படுத்த முயலும் மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திருச்சி கிளை செயலாளர் பாண்டியராஜன், கிளைத்தலைவர் வெங்கடசுப்பிரமணியன் உட்பட 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ரயில்வே வளாகத்தில் எஸ்சி எஸ்டி அலுவலகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

VIDEOS

Recommended