கிராம கணக்குகளை தணிக்கை செய்திட வருவாய் தீர்வாய் அலுவலர்கள் நிர்ணயம்

சுரேஷ் பாபு

UPDATED: Jun 14, 2024, 6:22:16 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் 1433-ஆம் பசலி ஆண்டுக்கு வருவாய் தீர்வாயம் நடத்திடவும் கிராம கணக்குகளை தணிக்கை செய்திடவும் வருவாய் தீர்வாய் அலுவலர்கள் நிர்ணயம் செய்தும் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 7 ம் தேதி ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியரும், ஜமாபந்தி அலுவலருமான ஏ.கற்பகம், வட்டாட்சியர் செ.வாசுதேவன் முன்னிலையில் மனுக்களை பெற்று வந்தார். 

இந்நிலையில் நேற்று பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்துக் கொண்டு  பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு ஜமாபந்தி அலுவலருக்கு பரிந்துரை செய்தார். மேலும் பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். 

 

VIDEOS

Recommended