- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சேத்தியாத்தோப்பு அருகே ஆக்கிரமிப்பு அகற்றாததால் குடியிருப்பு வாசிகள் சாலை மறியல்
சேத்தியாத்தோப்பு அருகே ஆக்கிரமிப்பு அகற்றாததால் குடியிருப்பு வாசிகள் சாலை மறியல்
சண்முகம்
UPDATED: Jul 10, 2024, 6:06:15 AM
Latest District News in Tamil
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மழவராயநல்லூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் நகரில் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்கான கிராமத்திற்கு செல்லவும் வெளியேறவும் சரியான வழித்தடம் இல்லாமல், இருக்கும் வழித்தடமும் ஆக்கிரமிப்பில் இருப்பதால் குடியிருப்பு வாசிகள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வர மிகவும் சிரமப்பட்டு வேதனை அடைந்து வந்தனர்.
District News & Updates in Tamil
மேலும் தற்போது உள்ள வழியால் நடந்து செல்ல மட்டுமே முடியும் எனவும், வாகனங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல முடியாது எனவும் தெரிவித்தனர்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பலரிடமும் மனு கொடுத்தும் இன்னமும் அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருந்து வருவதாக குடியிருப்பு வாசிகள் கடும் வேதனை அடைந்தனர்.
இந்நிலையில் ஆய்வு என்ற பெயரில் ஆக்கிரமிப்பை பார்வையிட வந்த அதிகாரிகளிடம் இன்னமும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருப்பது ஏன்? என்று கேட்டு அப்பகுதி குடியிருப்பு வாசிகள் ஸ்ரீமுஷ்ணம்- சேத்தியாத்தோப்பு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
News
அப்போது அவர்களிடம் காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை செய்து உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு சில தினங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து அவர்களை கலையைச் செய்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து இதே போன்ற நிலை நீடிக்குமானால் அரசு அதிகாரிகளை சிறை பிடித்து முற்றுகையிடும் போராட்டம் நடத்தியே தீருவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.