- முகப்பு
- மாவட்டச் செய்தி
- புவனகிரியில் குப்பை கிடங்கில் தீ விபத்து , புகைமூட்டம் ஏற்பட்டதால் குடியிருப்பு வாசிகள் அவதி.
புவனகிரியில் குப்பை கிடங்கில் தீ விபத்து , புகைமூட்டம் ஏற்பட்டதால் குடியிருப்பு வாசிகள் அவதி.
சண்முகம்
UPDATED: Jul 31, 2024, 5:05:17 AM
கடலூர் மாவட்டம்
புவனகிரி பேரூராட்சி குப்பை கிடங்கில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் புகை மூட்டம், மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதனால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் எதிர்க்கரையில் உள்ள கிராமத்தினரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதி அடைந்தனர்.
இந்த தீ விபத்து காரணமாக குப்பை கிடங்கில் இருந்த குப்பை தரம் பிரிக்கும் தளவாட பொருட்கள் எரிந்து சேதம் ஏற்பட்டது .
Latest Cuddalore News & Live Updates
புவனகிரி பேரூராட்சியின் அலட்சியத்தின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தானது குப்பை தரம் பிரிக்கும் கூடத்தின் வெளிப்பகுதியில் கருவேல மரங்கள் வெட்டி காய்ந்து உள்ள நிலையில் அவற்றிற்கு மர்மமான முறையில் பற்றிய தீ அப்படியே காற்றின் மூலம் பரவி குப்பை கிடங்கின் உள்ளேயும் பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பல லட்ச ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது. இவற்றை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றால் மக்களின் வரிப்பணம் பல லட்ச ரூபாய் செலவு செய்தாக வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.
Cuddalore News Today Live
தீ காற்றின் மூலம் பரவியதா அல்லது யாரேனும் தீ வைத்தனரா? என காவல்துறையினர் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்தத் தீ விபத்தானது பல மணி நேரம் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.