- முகப்பு
- மாவட்டச் செய்தி
- புவனகிரி அருகே கரைமேடு கிராமத்தில் வாய்க்கால் அளவீடும் பணியின் போது சரியான அளவீடு செய்யவில்லை என குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டு
புவனகிரி அருகே கரைமேடு கிராமத்தில் வாய்க்கால் அளவீடும் பணியின் போது சரியான அளவீடு செய்யவில்லை என குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டு
சண்முகம்
UPDATED: May 9, 2024, 7:57:31 PM
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கரைமேடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஜெயங்கொண்டான் பாசன வாய்க்கால் செல்கிறது.இந்த வாய்க்காலின் கரை மீது பலர் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் இந்த வாய்க்காலை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி கொடுக்க வேண்டும் என வாய்க்காலின் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் ஜெயங்கொண்டான் பாசன வாய்க்கால் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த அளவீடு பணியின் போது குடியிருப்பு வாசிகள் அளவீடு செய்தவர்களிடம் யூடிஆர் எப்எம்பி மூலம் அளவீடு செய்ய வேண்டும், தற்போது அளவீடு செய்வது சரியான அளவீடுகளில் இல்லை என தெரிவித்தனர்.
ஆனாலும் தொடர்ந்து அதிகாரிகள் தங்களிடம் உள்ள அளவீடுபடி அளவீடு செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் இது குறித்து குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கும் போது உண்மையான அளவுகளின் படி அளவீடு செய்தால் யாரும் பாதிப்படைய மாட்டார்கள் என அவர்கள் தெரிவித்தனர்.