- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கும்பகோணம் அருகே காணாமல் போன மருந்தக ஊழியர் பிணமாக மீட்பு காவல் துறை விசாரணை.
கும்பகோணம் அருகே காணாமல் போன மருந்தக ஊழியர் பிணமாக மீட்பு காவல் துறை விசாரணை.
ரமேஷ்
UPDATED: Jun 15, 2024, 10:19:51 AM
கும்பகோணம் அருகே சோழபுரம் பேரூராட்சி, அய்யாநல்லூர் கிராமம், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி தம்பிதுரை என்பவரின் மகன் கோகுல் (25) கும்பகோணத்தில் தனியார் மருந்தகத்தில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 12ம் தேதி இரவு மருந்தகத்திற்கு இரவு நேர பணிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார்.
பின்னர் மறுநாள் வரை வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியான குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோகுலை தேடி உள்ளனர்.
ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் சோழபுரம் போலீஸ் நிலையத்தில் 13ம் தேதி இரவு புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் தேடி வந்த நிலையில் இன்று காலை கோவிலாச்சேரி ஊராட்சி, பழவாற்றங்கரை அருகே உள்ள சுடுகாட்டில் மர்மமான முறையில் கோகுல் கொலை செய்து எரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சோழபுரம் போலீசார் மற்றும் தஞ்சாவூர் தடயவியல் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கோகுல் சடலமாக கிடந்த சுடுகாட்டில் சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் கோகுல் செல்போனை சோதனை செய்த போலீசார் கடைசியாக பேசிய அவரது நண்பர்கள் இரண்டு பேரை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ALSO READ | லஞ்ச வழக்கில் பெண் தாசில்தார் கைது.