• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ராமேஸ்வரத்தில் பழுதடைந்த சாலையை சீரமைக்கவும் விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

ராமேஸ்வரத்தில் பழுதடைந்த சாலையை சீரமைக்கவும் விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கார்மேகம்

UPDATED: Oct 9, 2024, 8:14:50 AM

இராமேஸ்வரம்

இராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தினந்தோறும் பல நூறு  வாகனங்களில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்

இங்கு இராமேஸ்வரம் நகராட்சி டோல் கேட் அமைத்து நுழைவு கட்டணம் வசூல் செய்கிறது

இந்த டோல் கேட் வருமானம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை வசூலாகும் இப்படி டோல் வரி வசூலிப்பதில் மட்டும் கவனம் செலுத்தும் நகராட்சி நிர்வாகம் வாகன ஓட்டிகளுக்கான சாலை வசதியை சரியாக கவனிப்பதில்லை பழுதடைந்த சாலையை சீரமைப்பதில்லை

Latest Rameshwaram News Today

சாலை விரிவாக்கம் செய்வதில்லை வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி செய்து கொடுப்பதில்லை இப்படி மக்களுக்கான எந்த அடிப்படை வசதியையும் செய்யாமல் வருமானம் மட்டும் குறிக்கோளாக செயல்படும் இராமேஸ்வரம் நகராட்சி குறிப்பாக டோல் கேட் அமைந்துள்ள சாலையை திருக்கோயில் காட்டேஜ் வரை விரிவாக்கம் செய்ய வேண்டும் அந்த பகுதியில் திருவிழா போன்ற நேரங்களில் வாகனங்கள் நெரிசல் ஏற்படுவதை தவிர்க சாலை விரிவாக்கம் அவசியமாகிறது 

அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்த இடவசதி இன்றி வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைவதை போக்க இடவசதி அவசியமாகிறது குறிப்பாக தங்கச்சி மடம் ஊராட்சி தண்ணீர் ஊற்று சர்ச் ஸ்டாப்பில் இருந்து டோல் கேட் வரை சாலை விரிவாக்கம் உடன் செய்ய வேண்டும் வாகனங்கள் விபத்தில்லாமல் சென்று வர தேவையான சாலைவதியை அமைக்க நெடுஞ்சாலைத்துறை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் 

Breaking News In Today In Tamil

சாலையை விரிவாக்கம் செய்வதும் பழுதான சாலையை உடன் பழுது நீக்கம் செய்வதும் உடன் நடவடிக்கை எடுக்க இராமேஸ்வரம் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் முன்வர வேண்டும் 

இது போன்ற மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை மாவட்ட நிர்வாகம் இராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் துரிதமாக செயல்படுத்த வேண்டும்

இந்த விஷயத்தில் இராமேஸ்வரம் நகராட்சி துரிதமாக செயல்படாத நிலை ஏற்படுமானால் இந்த விவாகாரத்திற்கான போராட்டத்தை விரைவில் எங்களது சி.ஐ.டி.யு. தொழில் சங்கம் முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம் என்று சி.ஐ.டி.யு தொழில் சங்க மாவட்ட துணை செயலாளர் எம்.கருணாமூர்த்தி கூறினார். 

 

VIDEOS

Recommended