- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கிருஷ்ணகிரியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் வீடுற்ற தொழிலாளிகளுக்கு வீடு வழங்க கோரிக்கை மனு.
கிருஷ்ணகிரியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் வீடுற்ற தொழிலாளிகளுக்கு வீடு வழங்க கோரிக்கை மனு.
சசிகுமார்
UPDATED: Sep 16, 2024, 1:13:50 PM
கிருஷ்ணகிரி மாவட்டம்
காவேரிப்பட்டினம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக சொந்த வீடுகள் இன்றி வாடகை வீடுகளில் குடியிந்தவாறு தீ பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறனர்.
தீப்பெட்டி தொழிற்சாலையில் மூலமாக கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வீடு வாடகை கூட கட்ட முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதால், அனைவருக்கும் வீடு என்றத் திட்டத்தின் கிழ் வீடு வழங்க வேண்டும் என வழியுறுதி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் தொடர் மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று தெரிய வருகிறது,
Latest Krishnagiri News In Tamil
இதனால் பாதிக்கப்பட பெண்கள் சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் மகப்பாஷா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ஏழை பெண்கள் மீண்டும் மாவட்ட ஆட்சியர் சரயுவை சந்தித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் இன்றி வாடகை வீட்டில் வசிக்கும் எங்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் அனைவருக்கும் வீடுவழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்கிட வேண்டும் என்றும்
தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் எங்களுக்கு குடியிருந்து வரும் வீடுகளுக்கு வாடகை பணம் கட்ட முடியாத சூழ்நிலை இருந்து வருவதால் எங்கள் வீட்டு பிள்ளைகளை கல்லூரிகளில் சேர்ந்து படிக்க கூட முடியாது நிலை ஏற்பட்டுள்ளது,
Breaking News In Tamil
ஆகையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடுக்கப்பட்டுள்ள மனுக்கள் மீது உரிய ஆய்வு மேற்கொண்டு அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்,
அப்போது மாவட்ட துணைத் தலைவர் பிரகாஷ், மாவட்ட மகளிர் அணி தலைவி சசிகலா, துணைத் தலைவி மஞ்சு, மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெகதீஷ் மற்றும் பெருமாள், பழனி, பிரபா, உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.