- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து போன்ற தத்ரூபமாக விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து போன்ற தத்ரூபமாக விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி.
ராஜா
UPDATED: Apr 26, 2024, 7:35:29 PM
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் அதில் இருந்து தங்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு தீயணைப்புத் துறையினர் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அரசு மருத்துவமனையில் திடீரென ஆபத்து காலத்தில் ஏற்படும் தீ விபத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தீயணைப்பு துறையினர் சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மருத்துவமனை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு பின்னர் தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தும் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி தத்துரூபமாக நடத்தி காட்டினர்.
மேலும் தீ அணைக்கும் இயந்திரத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து தீயணைப்புத் துறையினர் சார்பில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியின் மூலம் அவசர காலத்தில் மருத்துவர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது குறித்து அவர்களிடம் எடுத்துரைத்தனர்
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்வி சஜீவனா மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர்கள் செவிலியர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.