- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மக்கள் வசிப்பிடத்தை பிடுங்க துடிக்கும் இராமேஸ்வரம் வனத்துறை சட்ட ஒழுங்கு பிரச்சினை மாவட்ட நிர்வாகம் மெளனம் ஏன் ?
மக்கள் வசிப்பிடத்தை பிடுங்க துடிக்கும் இராமேஸ்வரம் வனத்துறை சட்ட ஒழுங்கு பிரச்சினை மாவட்ட நிர்வாகம் மெளனம் ஏன் ?
கார்மேகம்
UPDATED: May 27, 2024, 11:05:57 AM
District News
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சிக்குட்பட்ட சேரான்கோட்டை தெற்கு கரையூர் சேதுபதி நகர் உள்ளிட்ட கிராமங்கள் நாட்டுப்படகு மற்றும் சிறு தொழில் செய்யும் மீன்பிடிப்பை கொண்ட பகுதியாகும் இந்த பகுதியில் மீனவர்கள் நூற்றாண்டு காலமாக வாழும் பராம்பரிய முள்ள பகுதி என்பது குறிப்பிட தக்கது.
இச் சூழலில் இக்கிராமங்களில் மக்கள் 50 ஆண்டுக்கும் மேல் வாழ்வியல் வசிப்பிடமாகக் கொண்டும் சிறுதொழில் புரியும் இடமாகவும் பின்னி பிணைந்து வாழ்ந்து வரும் நிலையில் இக் கிராமங்கள் அனைத்தும் இப் பகுதி மக்களின் கவனத்திற்கு தெரியாமலே 1988 ம் ஆண்டு அன்றைய மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தால் வனத்துறை வசம் ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது.
Today District News
அதன்பிறகு 1998 ம் ஆண்டு இப்பகுதி அனைத்தும் காப்பு வனமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது இதனை தாமாக தெரிந்து கொண்ட பகுதி மக்கள் இதனை ஆட்சேபித்து முதல்கட்டமாக இராமேஸ்வரம் கரையூர் கிராமத்தில் நடைபெற்ற வருவாய் கோட்டாட்சியர் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் மனு செய்துள்ளனர்.
அந்த மனு மீதான விசாரணை மேற்கொண்ட இராமேஸ்வரம் வட்டாட்சியர் நிர்வாகம் இது விசயத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு நிர்வாகங்கள் செய்துள்ள சட்ட விதி மீறல்களை சுட்டிக்காட்டியதுடன் இந்த பகுதிகள் வனத்துறையில் இருந்து விலக்களிக்க படுவது அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டி இருந்தது
ஆனாலும் கூட இது விசயத்தில் உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை இச் சூழலில் சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கிராம மக்கள் தங்கள் பிரச்சினையை சிவகங்கை வனத்திட்ட செயல் அலுவலர் கவனத்திற்கு கொண்டு சென்று தங்கள் கிராமங்களை வனத்துறையில் இருந்து விலக்கலிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 2002 ம் ஆண்டு மனு செய்துள்ளனர்
அம்மனுவை முறையாக பரிசீலனை செய்த வனத்துறை நிர்வாகம் கோரிக்கை நியாயத்தை உணர்ந்து கடந்த 2003 ம் ஆண்டு சம்பந்தப்பட்ட பகுதிகளை வனத்துறையில் இருந்து விலக்கலிப்பு செய்து உத்தரவு பிறப்பித்தது
Online District News
ஆனால் அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டிய ராமேஸ்வரம் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை மாவட்ட ஆட்சியர் நிர்வாகங்கள் அதனை செய்ய தவறியதால் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தற்போதைய வனத்துறை நிர்வாகமானது ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறைத்து சம்பந்தப்பட்ட பகுதி கிராமங்கள் வனத்துறையிடம் இருப்பது போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இப்பகுதி மக்களுக்கு தொடர் இடையூர் செய்து வருகிறது
இது குறித்து மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமேஸ்வரம் கடல் தொழிலாளர் சங்கம் மற்றும் மீனவர் சங்கங்கள் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளன.