- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ராமநாதபுரம் - ராமேஸ்வரம் தேசிய நேடுஞ்சாலை நிறுத்தங்களில் நிற்காமல் சென்ற பஸ் டிரைவர்.
ராமநாதபுரம் - ராமேஸ்வரம் தேசிய நேடுஞ்சாலை நிறுத்தங்களில் நிற்காமல் சென்ற பஸ் டிரைவர்.
கார்மேகம்
UPDATED: May 9, 2024, 6:34:49 PM
ராமநாதபுரம் - ராமேஸ்வரம் தேசிய நேடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தங்களில் பஸ்கள் நிற்காமல் சென்ற 2 பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
ராமநாதபுரத்தில் இருந்து புண்ணியத்தலமான ராமேஸ்வரத்திற்கு தினமும் ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகின்றன
இவ்வாறு ராமநாதபுரத்தில் இருந்து செல்லும் பஸ்களும் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு வரும் பஸ்களும் வழியில் உள்ள மண்டபம் வேதாளை எஸ்.மடை மரைக்காயர் பட்டிணம் பிரப்பன்வலசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நின்று செல்வதில்லை என்று புகார் எழுந்தது
இது தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அளிக்கப்பட்டது இந்த மனுவை விசாரித்த கலெக்டர் விஷ்ணு சந்திரன் மேற்கண்ட பகுதிகளில் அரசு பஸ்கள் கண்டிப்பாக நின்று செல்ல வேண்டும் என்றும் நிற்காமல் செல்லும் பஸ்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து காரைக்குடி அரசு போக்குவரத்துக்கழக வணிக துணை மேலாளர் அனைத்து பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார் அதில் ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கும், ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கும் செல்லும் அனைத்து பஸ்களும் மண்டபம் பஸ் நிலையத்திற்கு உள்ளே கண்டிப்பாக செல்ல வேண்டும்
மேலும் இடை நில்லா பஸ்கள் தவிர மற்ற அனைத்து பஸ்களும் மரைக்காயர் பட்டிணம் வேதாளை எஸ்மடை பிரப்பன்வலசை பெருங்குளம் ஆகிய பஸ் நிறுத்தத்தில் கண்டிப்பாக நின்று செல்ல வேண்டும் இவ்வாறு சுற்றறிக்கை அனுப்பி அந்த வழியாகச் செல்லும் பஸ் டிரைவர் கண்டக்டரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது
இந்த நிலையில் கலெக்டரின் உத்தரவை அமல்படுத்தும் வகையில் ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகமது போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் மேற்கண்ட தேசிய நேடுஞ்சாலை பகுதியில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
உத்தரவிடப்பட்டுள்ள பஸ் நிறுத்தங்களில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பஸ்களை ஆய்வு செய்ததில் 2 பஸ்கள் மேற்கண்ட நிறுத்தங்களில் நிற்காமல் சென்றது தெரியவந்தது
இதைத் தொடர்ந்து 2 பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்படும் என்றும் மேற்கண்ட அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.