ராமநாதபுரம் - கீழக்கரை ரெயில்வே மேம்பாலம் இன்று திறப்பு.

கார்மேகம்

UPDATED: Sep 20, 2024, 8:57:51 AM

ராமநாதபுரம் மாவட்டம்

ராமநாதபுரம் ரெயில்வே கேட் பகுதியில் கடந்த 6- ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ரெயில்வே

மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்து நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று திறக்கப்பட உள்ளது 

( மேம்பாலம் )

ராமநாதபுரம் - கீழக்கரை சாலை ரெயில்வே கேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடியை தடுக்க நெடுஞ்சாலை துறையின் மூலம் ரூ.30.74 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டது

மொத்தம் 719.60 மீட்டர் நீளத்திலும் 12- மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளன.

கீழக்கரை ரெயில்வே மேம்பாலம்

இந்த மேம்பாலத்திற்கான அணுகு சாலை இருபுறமும் சேர்த்து மொத்தம் 379 மீட்டர் நீளம் 5.50 மீட்டர் அகலம் அமைக்கப்பட்டுள்ளது

2018- ம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்ட இந்த பாலப் பணிகள் நீண்ட தாமதத்திற்கு பின்னர் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது பாலத்தின் முக்கிய பகுதியான ரெயில்வே தண்டவாள பகுதியில் ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது

Latest Ramanathapuram District News

( இன்று திறப்பு விழா)

பாலத்திற்கான கட்டமைப்பு பணிகள் முடிவடைந்து விளக்கு வசதிகள் மின்சார வசதி தண்ணீர் வெளியேறும் வசதி போன்ற அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன பணிகள் முழுமை அடைந்த நிலையில் மேம்பாலம் திறக்கப்படாமல் இருந்தபோது பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன 6- ஆண்டுகளாக போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு விடிவுகாலம் பிறக்காதா என்ற ஏக்கம் ஏற்பட்டது

விரைவில் பாலத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து தற்போது போராட்ட அறிவிப்பு வெளியானது இந்த நிலையில் பாலம் இன்று ( வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது

( வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி)

அமைச்சர் ராஜகண்ணப்பன் புதிய பாலத்தை திறந்து வைக்க உள்ளார் என்றும் எம்.எல்.ஏ. எம்.பி. உள்ளிட்டடோர் கலந்து கொள்வார்கள் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

VIDEOS

Recommended