• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சவுதி அரேபியாவில் மாயமான ராமநாதபுரம் மீனவரை பாதுகாப்பாக மீட்க வேண்டும் மத்திய மந்திரிக்கு ஒ.பன்னீர்செல்வம்‌ கடிதம்

சவுதி அரேபியாவில் மாயமான ராமநாதபுரம் மீனவரை பாதுகாப்பாக மீட்க வேண்டும் மத்திய மந்திரிக்கு ஒ.பன்னீர்செல்வம்‌ கடிதம்

கார்மேகம்

UPDATED: May 23, 2024, 8:43:05 AM

முன்னால் முதல் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார் அதில் கூறியிருப்பதாவது ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா காரங்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர் சமயகாந்த் சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் 

கடந்த 09/11/2023 முதல் அவர் காணாமல் போனார் அன்றைய தினம் இரவு 9.30 மணிக்கு தனது மனைவி நந்தினியுடன் பேசி உள்ளார் அவ்வாறு  பேசிக்கொண்டிருக்கும் போது தொலைபேசி அழைப்பு திடிரென துண்டிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு அவரிடமிருந்து எந்த தொலைபேசி அழைப்பும் இல்லை இதன் பின்பு கணவர் குறித்து நந்தினி விசாரித்த போது காவல் நிலையத்தில் இருப்பதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்

அதன்பிறகு யாரிடம் இருந்தும் எந்த செய்தியும் வரவில்லை இன்றுவரை அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை சயமகாந்தின் பாதுகாப்பு குறித்து குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்.

குடும்பத்தின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது எனவே சமயகாந்த் குறித்து சவுதி அரேபியா உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி அவரை பாதுகாப்பாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

  • 2

VIDEOS

Recommended